எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வாஷிங்டன் : சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்துவரும் கோரிக்கையை பைடன் நிராகரித்தார் என்று எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்துவரும் ஸ்பேஸ் எக்ஸின் கோரிக்கையை அப்போதைய அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் நிராகரித்ததாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார். விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்துவரப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஸ்பேஸ் எஸ்க் சிஇஓ மஸ்க் இத்திட்டத்துக்கு முன்னுரிமை அளித்ததற்காக இப்போதைய அதிபர் ட்ரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களுக்கு மேலாக தங்கி இருந்த விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் விண்கலத்தில் திரும்பிய இருவரும் இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா கடலில் இறங்கினர். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்பேஸ் எஸ்க் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில், "மற்றொரு விண்வெளி வீரரை பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப அழைத்து வந்ததற்கு ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா குழுவினருக்கு எனது வாழ்த்துகள். இந்தத் திட்டத்துக்கு முன்னுரிமை அளித்ததற்கு அதிபர் ட்ரம்புக்கு எனது நன்றிகள்.” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விண்வெளி வீரர் சுனிதாவை முன்பே பூமிக்கு திரும்பி அழைத்து வரும் கோரிக்கையை முந்தைய அதிபர் ஜோ பைடன் நிராகரித்ததாக குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில், விண்வெளி வீரர்களை முன்பே பூமிக்கு அழைத்து வருவதற்கு நாங்கள் முன்வந்தோம். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. விண்வெளி வீரர்கள் அங்கு 8 நாட்கள் மட்டுமே தங்கி இருந்திருக்க வேண்டியவர்கள் அவர்கள் சுமார் 10 மாதங்கள் அங்கிருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. உண்மையில் இதில் எந்த அர்த்தமும் இல்லை.
ஸ்பேஸ் எக்ஸ் சில மாதங்களுக்கு முன்பே விண்வெளி வீரர்களை பூமிக்கு திருப்பி அழைத்து வந்திருக்க முடியும். நாங்கள் அந்தக் கோரிக்கையை ஜோ பைடன் நிர்வாகத்திடம் முன்வைத்தோம். ஆனால் அரசியல் காரணங்களுக்காக அந்தக் கோரிக்கை நிகாரிக்கப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக ஜனவரி மாதத்தில், கோடீஸ்வரர் எலான் மஸ்க், கடந்த 2024 ஜுன் முதல் விண்வெளியில் இருந்து வரும் விண்வெளி வீரர்களை விரைவில் பூமிக்கு திரும்ப அழைத்து வருமாறு அதிபர் தன்னிடம் கேட்டுக்கொண்டார்.
ஜோ பைடன் நிர்வாகம் அவர்களை இவ்வளவு நாள் அங்கே விட்டு வைத்தது கொடுமையானது” என்று தெரிவித்திருந்தார். இதனை அப்போது அதிபர் ட்ரம்பும் தனது ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட பதிவில் உறுதிப்படுத்தியிருந்தார். அவர், “பைடன் நிர்வாகத்தினால் விண்வெளியில் கைவிடப்பட்ட துணிச்சலான இரண்டு விண்வெளி வீரர்களை பூமிக்கு திரும்ப அழைத்து வரும்படி, எலான் மஸ்க் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் கேட்டுள்ளேன். அந்தத் திட்டம் விரைவில் தொடங்கும்.”என்று தெரிவித்திருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-10-2025.
14 Oct 2025 -
சாதி பெயர்களில் மாற்றம் வேண்டும்: முதல்வரிடம் திருமாவளவன் கோரிக்கை
14 Oct 2025சென்னை : சாதி பெயர்களில் மாற்றம் வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
பீகார் தேர்தலில் தொகுதிப் பங்கீடு: ஆர்.ஜே.டி. 135, காங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டி
14 Oct 2025புதுடெல்லி : பீகார் தேர்தலில் தொகுதிப் பங்கீடில் ஆர்.ஜே.டி. 135, காங். 61 இடங்களில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சட்டசபையில் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திடீர் போராட்டம்
14 Oct 2025சென்னை : சட்டசபையில் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு திடீர் பரபரப்பு நிலவியது.
-
கரூர் சம்பவம்: ஆவணங்களை சமர்ப்பித்தது எஸ்.ஐ.டி.
14 Oct 2025சென்னை : கரூர் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து ஆவணங்களை சமர்ப்பித்தது எஸ்.ஐ.டி.
-
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
14 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம
-
ரூ.95 ஆயிரத்தை நெருங்கிய ஒரு பவுன் தங்கம் விலை : ஒரேநாளில் ரூ.1,960 உயர்வு
14 Oct 2025சென்னை : 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (அக்.14) பவுனுக்கு ரூ.1,960 உயர்ந்து மீண்டும் அதிர்ச்சியளித்துள்ளது.
-
6 நாட்களாக நீடித்த டேங்கர் லாரி சங்கங்களின் போராட்டம் வாபஸ்
14 Oct 2025சென்னை : சென்னை ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து 6 நாட்களாக நீடிதத் டேங்கர் லாரி சங்கங்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
-
மாநில திட்டக் குழுவின் 4 அறிக்கைகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
14 Oct 2025சென்னை : மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
-
சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
14 Oct 2025சென்னை : சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
பீகார் சட்டமன்ற தேர்தல்: 71 பேரின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.
14 Oct 2025பாட்னா : பீகார் தேர்தலில் போட்டியிடவுள்ள 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.
-
தமிழக 'மா' விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க மாம்பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
14 Oct 2025சென்னை : நாட்டின் பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்யவும், மா விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும் மாம்பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை தேவை என்று ப
-
மனிதராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர்: சி.வி.சண்முகத்திற்கு அமைச்சர் கண்டனம்
14 Oct 2025சென்னை : மனிதராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம் என்று அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஓட்டுநர் தேர்வு தானியங்கி மையங்கள் அமைக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து
14 Oct 2025சென்னை : தமிழ்நாட்டில் ஓட்டுநர் தேர்வு தானியங்கி மையங்கள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
-
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் அமைகிறது: ரூ.87,520 கோடியில் கூகுள் ஏ.ஐ. மையம் : பிரதமர் மோடியிடம் சுந்தர் பிச்சை விவரிப்பு
14 Oct 2025புதுடெல்லி : விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் கூகுள் அமைக்க உள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மையம் குறித்து அதன் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பி
-
வருங்கால வைப்புநிதியில் இருந்து இனி 100 சதவீதம் வரை பணம் எடுக்கலாம்
14 Oct 2025புதுடெல்லி : வருங்கால வைப்புநிதியில் இருந்து இனி 100 சதவீதம் வரை பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டப்பேரவைியல் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று ஆரம்பம் : முதல் நாளில் இரங்கல் தீர்மானம் - அவை ஒத்திவைப்பு
14 Oct 2025சென்னை : தமிழ்நாடு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று முதல் நடைபெறுவுள்ளது.
-
கர்நாடக முதல்வர் சித்தராமையா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
14 Oct 2025பெங்களூரு : கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்
-
சர்வதேச விதிகளை சில நாடுகள் வெளிப்படையாக மீறுகின்றன : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
14 Oct 2025புதுடெல்லி : உலக நாடுகளில் அமைதிக்காப்பு பணிகளில் இந்திய ராணுவ பெண் அதிகாரிகளின் பங்களிப்பு உள்ளதாக பெருமிதம் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சர்வதேச வ
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 3 பேருக்கு ஜாமீன்
14 Oct 2025சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
-
பாலஸ்தீன தனி நாடு பற்றி கேள்வி: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதில்
14 Oct 2025வாஷிங்டன் : பாலஸ்தீன தனி நாடு பற்றிய கேள்விக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதில் அளித்துள்ளார்.
-
நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்
14 Oct 2025டெல்லி : நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
திண்டுக்கல் தெற்கு த.வெ.க. மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமீன்
14 Oct 2025திண்டுக்கல் : திண்டுக்கல் தெற்கு த.வெ.க. மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்: த.வெ.க. நிர்வாகி
14 Oct 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தி னருக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என்று த.வெ.க. நிர்வாகி அறிவித்துள்ளார்.
-
இ.பி.எஸ். வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
14 Oct 2025சென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு நேற்று இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை