எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர், “விண்வெளியில், சர்வதேச விண்வெளி மையத்தில் (ஐஎஸ்எஸ்) 287 நாட்களாக தங்கியிருந்த இந்திய வம்சாவெளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீரர் வில்மோர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களின் உடல் நிலை பாதிக்கப்படும் என்றும், உயிருக்கு ஆபத்து என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இருந்தும், அந்த விண்வெளி மையத்தில் அவர்கள் அயராது தங்கள் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் ஃபால்கன் 9 ராக்கெட்டுடன் டிராகன் விண்களம் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி மையத்தைச் சென்றடைந்தது. இதனையடுத்து சுனிதா, வில்மோர் உள்ளிட்டோருடன் மேலும் 2 வீரர்களும் ஃப்ளோரிடா அருகே கடலில் பத்திரமாக இறங்கினர். அவர்கள் பத்திரமாக பூமிக்கு வந்தடைந்த செய்தி நம் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இத்தருணத்தில் சுனிதா வில்லியம்ஸுக்கும் அவரை பத்திரமாக பூமிக்கு கொண்டு வர உதவிய அனைவருக்கும் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


