எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான 3வது நாள் விவாதம் நேற்று காலை தொடங்கி நடைபெற்றது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் கேள்வி பதில் நேரத்தின்போது அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன் நீண்ட நேரமாக தனக்கு துணை கேள்வி கேட்க வாய்ப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டே இருந்தார்.
ஆனால் சபாநாயகர் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கிக் கொண்டே இருந்தார். குறிப்பாக ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.வாக இருக்கக்கூடிய பால் மனோஜ் பாண்டியனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட பிறகு அம்மன் கே அர்ஜுனன் டென்ஷனாக இருந்தார். இதனையடுத்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தன் இருக்கையில் அமர்ந்தபடியே சபாநாயகரை நோக்கி வாய்ப்பு வழங்கவில்லை என ஆவேசமாக கத்தினார்.
கோபமடைந்த சபாநாயகர் அப்பாவு, "அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் இதுபோல மிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவறு. எதிர்க்கட்சித் தலைவர் நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கலாமா..? கொறடா வேலுமணி நீங்களும் இதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்... நான் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் இருவருக்கும் சரிசமமான வாய்ப்பை வழங்கி வருகிறேன்.
அ.தி.மு.க.வில் 66 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறீர்கள் அனைவருக்கும் ஒரே நாளில் பேச வாய்ப்பு வழங்க முடியுமா..?.. அம்மன் அர்ஜுனன் இதே போல இருக்கையில் அமர்ந்து கொண்டு மிரட்டும் தொணியில் பேசிக் கொண்டே இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்" என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


