Idhayam Matrimony

9 மாதம் இடைவெளிக்கு பிறகு பூமிக்கு திரும்பிய சுனிதாவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

புதன்கிழமை, 19 மார்ச் 2025      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை :  9 மாதம் இடைவெளிக்கு பிறகு பூமி திரும்பிய, விண்வெளி வீரர் சுனிதாவுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் ஒன்பது மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ்(59), மற்றும் புட்ச் வில்மோர்(62), நேற்று அதிகாலை பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்துள்ள 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது.மீட்புப்படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர். பத்திரமாக, திரும்பிய, விண்வெளி வீரர் சுனிதாவுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து இ.பி.,எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கை: 9 மாதங்கள் விண்வெளியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோருக்கு வாழ்த்துகள்.

தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் உருவகமாக சுனிதா வில்லியம்ஸ் திகழ்கிறார். திட்டமிடப்படாத 9 மாதங்கள் விண்வெளியில் இருந்து திரும்பியது விடாமுயற்சிக்கு ஒரு சான்று. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரராக, அவரது முன்மாதிரியான பயணம் விடாமுயற்சிக்கு ஒரு சான்றாகும்.

வீட்டிற்கு வரவேற்கிறோம். க்ரூவ் 9 திட்டத்தின் 4 பேர் கொண்ட குழுவின் சாதனை வருங்கால தலைமுறையினரை ஊக்குவிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து