எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு : நடுரோட்டில் கொலை செய்வதுபோல் ரீல்ஸ் வீடியோ எடுத்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் உமனாபாத் பகுதியில் வாலிபர் ஒருவரை மற்றொரு வாலிபர் சுத்தியலால் தாக்கி கொலை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பானது. இதுகுறித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை எதுவும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும், வாலிபர்கள் 2 பேரும் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டது தெரியவந்தது.
இதையடுத்து உமனாபாத் போலீசார் வீடியோ ஆதாரங்களின் பேரில் 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் கலபுரகி புறநகர் பகுதியை சேர்ந்த சச்சின் (வயது 30), சாய்பன்னா (32) என்பது தெரியவந்தது. சச்சின் மீது சாய்பன்னா அமர்ந்து சுத்தியலால் தாக்கி கொலை செய்வது போன்று வீடியோ எடுத்து வெளியிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


