எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இம்பால் : மணிப்பூரில் மீண்டும் வன்முறை மேதலில் ஒருவர் உயிரிழந்தார்.
மணிப்பூரின் பதற்றமான சூரசந்த்பூர் மாவட்டத்தில், ஹ்மர் மற்றும் சோமி சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 53 வயது லால்ரோபுய் பகுமேட் கொல்லப்பட்டார். இதையடுத்து, முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குக்கி பழங்குடின பிரிவின் உள்பிரிவான ஹமர்ஸ் மற்றும் சோமி இடையே சமீபகாலமாக மோதல் நிலவிவருகிறது. கடந்த 16ம் தேதி இரவு, ஹமர் தலைவர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இரு சமூகங்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக, சூரசந்த்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
நேற்று முன்தினம் மாலையில் சோமி குழு ஒன்று தங்கள் சமூகக் கொடியை ஏற்ற முயன்றபோது, அதனை ஹ்மர்ஸ் குழு எதிர்த்தது. இதனால் ஏற்பட்ட வன்முறையில் சூரசந்த்பூர் நகரின் புறநகரில் லால்ரோபுய் பகுமேட் கொல்லப்பட்டார். இதையடுத்து, ஜோமி மாணவர் கூட்டமைப்பு காலவரையற்ற அவசரகால பணிநிறுத்தத்தை அறிவித்தது. அனைத்து வழக்கமான செயல்பாடுகளும் நிறுத்தி வைக்கப்படும் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும். அனைத்து கடைகளும் வணிக நிறுவனங்களும் மூடப்படும். மேலும் அனைத்து மக்களும் தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். நிலைமை மேம்படும் வரை இந்த அவசரகால முடக்கம் அமலில் இருக்கும் என்று ஜோமி மாணவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


