எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ஐ.பி.எல். சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மணிநேரத்தில் விற்று தீர்ந்தன.
நாளை மறுநாள்...
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி (நாளை மறுநாள்) தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23ம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது.
இணையதளம் மூலம்...
இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று (புதன்கிழமை) காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் தொடங்கியது . இதன்படி ரசிகர்கள் www.chennaisuperkings.com என்ற இணையதளம் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. டிக்கெட் விலை ரூ.1700 முதல் ரூ.7500 வரை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை பெற ரசிகர்கள் ஆரவம் காட்டினர் .இதனால் டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய ஒரு மணிநேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்த்தன.
ரசிகர்கள் குற்றச்சாட்டு...
டிஸ்ட்ரிக்ட் ஆப் மற்றும் இணையதளம் மூலமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இணையதளம் மூலமும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. இதனை அடுத்து காலை முதல் டிக்கெட்டுகளை பெறுவதற்காக சிஎஸ்கே அணி ரசிகர்கள் மொபைல் லேப்டாப் என அனைத்து சாதனங்களையும் வைத்து காத்துக் கொண்டிருந்தனர். டிக்கெட் விலை 1700 ரூபாய் ,2500 ரூபாய்,ரூ. 3500,ரூ. 4000 ரூபாய்,ரூ.7500 என்ற அளவு டிக்கெட் விற்பனை இருந்தது. இதில் ஏதேனும் ஒரு டிக்கெட்டையாவது பெற்றுவிடலாம் என சிஎஸ்கே ரசிகர்கள் போட்டி போட்டனர். ஆனால் சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு ஏமாற்றுமே மிஞ்சியது.
ரசிகர்கள் கோபம்...
வழக்கம் போல் உங்களுக்கு முன்பு பெரிய வரிசை காத்திருப்பதாக அந்த புக்கிங் தளத்தில் காட்டப்பட்டிருந்தது. இதில் சுமார் லட்சம் ரசிகர்கள் வரை தங்களது டிக்கெட் காத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சில மணி நேரத்திலேயே மீண்டும் டிக்கெட் அனைத்தும் காலி ஆகிவிட்டதாக அறிவிப்பு வெளியானது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எந்த கிரிக்கெட் போட்டிகளை பார்க்க நேர்ந்தாலும், இதேபோல் ஒரு சூழல்தான் உருவாவதாகவும் 40 ஆயிரம் பேர் பார்க்கும் மைதானத்தில் பலருக்கும் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என்றும் ரசிகர்கள் சாடி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒழுங்குபடுத்த வேண்டும்...
மேலும் டிக்கெட்டுகள் குறைந்த அளவே விற்கப்படுவதாகவும் எஞ்சியிருக்கும் டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்கப்படுவதாகவும் சிஎஸ்கே ரசிகர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். சிஎஸ்கே அணி நிர்வாகம் டிக்கெட் விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


