Idhayam Matrimony

1,200 பணியிடங்களை நிரப்ப மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் சிறப்பு தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு

வியாழக்கிழமை, 20 மார்ச் 2025      தமிழகம்
Geeta-Jivan 2024-11-26

Source: provided

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான 1,200 பணியிடங்களை நிரப்ப சிறப்பு தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 4வது நாள் விவாதம் நடந்தது. சட்டசபை உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.

இந்நிலையில் நேற்றைய கேள்வி நேரத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது 2 ஆண்டுகள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றிய மாற்றுதிறனாளிகளை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்கப்படும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன், இந்த அரசாணையை மறு ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக 1,200 பணியிடம் கண்டறியப்பட்டு விரைவாக சிறப்பு தேர்வு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடருக்குள்ளாக தேர்வு தேதியை அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து