Idhayam Matrimony

ராஜநாகம் கொத்தி சிகிச்சை பெற்று வந்த பிரபல பாம்புபிடி வீரர் பலி

வியாழக்கிழமை, 20 மார்ச் 2025      தமிழகம்
Suicide 2023 04 29

Source: provided

கோவை: ராஜநாகம் கொத்தியதில் சிகிச்சை பெற்று வந்த பாம்புபிடி வீரர் உயிரிழந்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாம்பு ஒன்று புகுந்து இருப்பதாக தகவல் வந்ததையடுத்து, பாம்பு பிடி வீரர் சந்தோஷ் அங்கு சென்று பாம்பை பிடிக்க முயன்றார். அந்த பகுதியில் புகுந்த பாம்பு கடும் விஷமுள்ள ராஜ நாகம் என்பது தெரியவந்தது. சந்தோஷ் கடந்த 20 ஆண்டுகளாக கோவை பகுதிகளில் உள்ள வீடுகளில் புகும் நாகம் உள்ளிட்ட பல விஷ பாம்புகளை பிடித்து வனப் பகுதியில் விடுவித்து இருக்கிறார் என கூறப்படுகிறது.

இந்த சூழலில் அவர், அந்த பாம்பை பிடிக்க முயன்றபோது அது அவரை கடித்தது. பாம்பு கடித்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாம்புபிடி வீரர் சந்தோஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து