எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் கையெழுத்திட்ட ஜெர்ஸியை பரிசாகப் பெற்றுள்ளார்.
மெஸ்ஸி...
கால்பந்து உலகில் மெஸ்ஸிக்கு ரசிகர்கள் ஏராளம். அவரைப் போல பந்தினைக் கட்டுப்படுத்தி விளையாடுபவர்கள் மிக மிகக் குறைவு என விமர்சகர்கள் பாராட்டுகிறார்கள். 2022 கால்பந்து உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி வென்றது. தற்போது, மெஸ்ஸி இன்டர் மியாமி அணிக்காக கிளப் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2026 உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் மெஸ்ஸி காயம் காரணமாக 2 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
சிறப்பு கிடைத்துள்ளது...
இந்நிலையில் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது: கால்பந்து எனக்கு மிகவும் ஆர்வமானது. அது எனது நரம்புகளில் ஓடியிருக்கிறது. இதேபோல் மேற்கு வங்கத்தில் உள்ள ஒருமுறையாவது பந்தினை திடலில் உதைத்த ஒவ்வொருவருக்கும் இந்த உணர்வு இருக்கும். இன்று, அந்த உணர்வுக்கு சிறப்பு கிடைத்துள்ளது. மெஸ்ஸியிடமிருந்து கையெழுத்திடப்பட்ட ஜெர்ஸி எனக்குக் கிடைத்திருக்கிறது.
கால்பந்தின் கலைஞன்...
கால்பந்து மீதான நேசம்தான் எங்களை இணைக்கிறது. கால்பந்தின் கலைஞன் மெஸ்ஸி, நம் காலத்தின் மேதை. புத்திசாலிதனத்தின் முன்மாதிரியாக விளங்கும் மெஸ்ஸியை மேற்கு வங்கம் பாராட்டுகிறது. இந்த ஜெர்ஸி மேற்கு வங்கத்திற்கும் அழகான போட்டியான கால்பந்துக்குமான பிரிக்க முடியாத இணைப்பைக் குறிக்கும் அடையாளமாக இருக்கும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


