எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ரயில்வே திட்டங்களுக்கான நிதியில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய அவை நிகழ்வில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கும் வேறுபாடு உள்ளது. ஏனெனில் மத்திய அரசின் பட்ஜெட், பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான பட்ஜெட்டாக இருக்கிறது. உதாரணத்திற்கு ரயில்வே திட்டங்களுக்காக மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதியை, உத்தரப் பிரதேசத்திற்கு ஒரே ஆண்டில் ஒதுக்கியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் ரயில்வே திட்டங்களுக்கு தமிழகத்திற்கு ரூ. 19,608 கோடிதான் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசின் நிதியுதவி இல்லாமல் தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியைக் கொண்டு செயல்படுத்தத் தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் டில்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்திய பிறகு தான் மத்திய அரசு நிதி வழங்கியது" என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


