Idhayam Matrimony

நாய்க்கடிக்கு போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளது: அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2025      தமிழகம்
Ma Subramani-2023-11-09

Source: provided

சென்னை : தமிழகத்தில் உள்ள 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு மற்றும் நாய்க்கடிக்கு மருந்துகள் இருப்பில் உள்ளன என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று (மார்ச் 21) கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை பேசுகையில், “தமிகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் வெறிநாய்க் கடிக்கு மருந்து உள்ளதா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசுகையில், “கடந்த ஆட்சிக் காலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு, வெறிநாய்க் கடிக்கு மருந்துகள் இல்லாமல் இருந்தது. கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் பாம்பு மற்றும் வெறிநாய்க்கடி பாதிப்பு இருப்பதால் அங்கெல்லாம் அவற்றுக்கான மருந்துகளை இருப்பு வைக்க முதல்வர் உத்தரவிட்டார்.

அதன்படி, தமிழகத்தில் உள்ள 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு மற்றும் நாய்க்கடிக்கு மருந்துகள் இருப்பில் உள்ளன. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சென்னையில் இருந்தபடியே கண்காணிக்கப்படுகிறது. மருத்துவத் துறை வலுவான கட்டமைப்பை உறுதி செய்திருப்பதுடன் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தியுள்ளது” என்று தெரிவித்தார்.

ஆரணி எம்.எல்.ஏ. சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், “கடந்த 2 ஆண்டுகளில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்கத்தில் உள்ளன. இவற்றையும் சேர்த்து மொத்தம் 3,300 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன” என்று பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து