Idhayam Matrimony

தப்ப முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்: சென்னையில் பரபரப்பு

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2025      தமிழகம்
Gun 2023 04 17

Source: provided

சென்னை : கைது செய்து அழைத்துச் சென்றபோது வாகனத்தில் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடி ஒருவரை போலீஸார் சுட்டுப் பிடித்த சம்பவம் சென்னை கிண்டியில் நடந்துள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி ஹைகோர்ட் மகாராஜா. இவரை மடிப்பாக்கம் காவல் நிலைய எஸ்.ஐ. தலைமையிலான தனிப்படையினர் நேற்று அதிகாலை கைது செய்தனர். அதிகாலை 2 மணியளவில் வேளச்சேரிக்கு அழைத்துவந்தனர். அங்கே அவரிடம் குற்றம் சம்பந்தமாக வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

பின்னர் வழக்கில் சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனத்தை கைப்பற்ற வேண்டி கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதிக்கு அந்த ரவுடியை அழைத்துச் சென்றனர். அப்போது அந்த ரவுடி கிண்டி காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தனிப்படையினரை தாக்கியுள்ளார். இதனால், தற்காப்புக்காக காவல் உதவி ஆய்வாளர் ரவுடியின் வலது கால் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். காயமடைந்து விழுந்த ரவுடியை போலீஸார் பிடித்தனர்.

பின்னர் அந்த நபரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்த நிகழ்வில் J7 வேளச்சேரி காவல் நிலைய ரோந்து வாகனத்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளது. அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து