முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹனி டிராப் மோசடி விவகாரம்: கர்நாடக சட்டசபையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அமளி

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2025      இந்தியா
Karnataka-Assembly

Source: provided

பெங்களூரு : ஹனி டிராப் மோசடி குறித்து நீதி விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பா.ஜ.க.  எம்.எல்.ஏ. க்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.

பெண்களை பயன்படுத்தி ஒருவரை பாலியல் சர்ச்சையில் சிக்க வைக்க நடக்கும் முயற்சி ‘ஹனி டிராப்’ எனப்படுகிறது. இத்தகைய ஹனி டிராப் வலையில் சிக்குவதால் அரசியல் பிரமுகர்கள் பலர், தங்களின் அரசியல் எதிர்காலத்தை தொலைத்துள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதத்தின் போது பேசிய கூட்டுறவு அமைச்சர் கே.என். ராஜண்ணா, "எனக்கு எதிராக ஹனி டிராப் முயற்சி நடந்தது. நான் மட்டுமல்ல, கர்நாடகாவில் கிட்டத்தட்ட 48 அரசியல் தலைவர்களுக்கு எதிராக ஹனி டிராப் முயற்சி நடந்துள்ளது.  இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கூறி இருந்தார்.

அமைச்சரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று காலை சட்டமன்றம் கூடியதும், எதிர்க்கட்சியான பா.ஜ.க. வின் எம்.எல்.ஏ. க்கள் இந்த விவகாரத்தை அவையில் எழுப்பி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், ஹனி டிராப் நடந்ததற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகக் கூறி தங்கள் கைகளில் இருந்த சிடிகளை சில உறுப்பினர்கள் காண்பித்தனர். சபாநாயகரை முற்றுகையிட்டு, பேப்பர்களை கிழித்து அவர் மீது வீசினர்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்துப் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா,  மக்களுக்காக உழைக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான மிகப்பெரிய சதி இது.  எனவே, இது தொடர்பாக நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் சித்தராமையா, "ஹனி டிராப்பில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து