Idhayam Matrimony

51,327 புதிய குடும்ப அட்டைகள் விரைவில் வழங்க நடவடிக்கை : சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2025      தமிழகம்
Chakrapani 2025-03-19

Source: provided

சென்னை : புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு 51,327 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்றைய அவை நிகழ்வில் கேள்வி நேரத்தில், 'தமிழகத்தில் ரேஷன் கடைகளில் எத்தனை புகார்கள் வந்திருக்கின்றன? அதேபோல எத்தனை ரேஷன் அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன?' என எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, "தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்படும், ஏற்கெனவே ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளம் மூலமாகவும் தொலைபேசி புகார் எண்ணிலும் புகார் அளிக்கலாம்.

திமுக ஆட்சியில் புதிதாக 3,000- க்கும் மேற்பட்ட நியாய விலைக்கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திமுக ஆட்சி அமைந்தவுடன் 18,09,677 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மொத்தமாக 2 கோடியே 25 லட்சத்து 59 ஆயிரத்து 224 குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. 51,327 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு புதிய அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் புதிய குடும்ப அட்டை பெற 1,67,795 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. அதுவும் விரைவாக பரிசீலனை செய்து வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து