எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கடன்மேல் கடன் வாங்கி, தமிழ்நாட்டு மக்களின் மீது கடனை சுமத்தியது தான் இந்த அரசின் சாதனையாக இருக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது: தி.மு.க. அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்போது, ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 73 ஆண்டுகால ஆட்சியில் வாங்கப்பட்ட கடன் ரூ. 5.18 கோடி, ஆனால், தி.மு.க.வின் 4 ஆண்டுகால ஆட்சியில் வாங்கப்பட்ட கடன் ரூ. 4.53 லட்சம் கோடி ஆகும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிதி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டது. இந்த நிதி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்ட பிறகுதான் 4 ஆண்டுகளில் கடன் ரூ. 4.53 கோடி கடன் வாங்கியுள்ளது.
பத்திரப் பதிவு வரி, கலால் வரி போன்ற மாநில அரசுகளின் வரிவிதிப்பு மூலம் ரூ. 1.01 லட்சம் கோடி கிடைக்கிறது. இதுமட்டுமின்றி அ.தி.மு.க. ஆட்சியைவிட தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசிடம் இருந்து ரூ. 33,000 கோடி கூடுதலாக வரிப் பகிர்வு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன்மேல் கடன் வாங்கி, தமிழ்நாட்டு மக்களின் மீது கடனை சுமத்தியது தான் இந்த அரசின் சாதனையாக இருக்கிறது. புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் குறித்த வெள்ளை அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. 100 நாள் வேலைத்திட்டத்தில் பணி செய்த மக்களுக்கு நிதி அளிக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள், ஆனால் நாடாளுமன்றத்தில் அதற்கான அழுத்தத்தை கொடுக்கவில்லை. மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதுதான் எங்கள் குறிக்கோள். எனத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


