எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பாட்னா : தேசிய கீதத்தை முதலமைச்சர் நிதிஷ் குமார் அவமதித்த விவகாரம் தொடர்பாக பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், நேற்று கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது சிரித்து பேசிக் கொண்டு இருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பலரும் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை பீகார் சட்டமன்றம் கூடியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அவை தொடங்கியதும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள் முதலமைச்சர் நிதிஷ் குமார் பதவி விலக வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து அவையின் செயல்பாடுகள் பத்து நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை.
அவை தொடங்கியது முதலே எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததை அடுத்து சட்டசபை கூடிய எட்டு நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டன. பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பீகாரில் சட்டசபை நடவடிக்கைகள் முதல் பாதி வரை ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இது குறித்து அம்மமாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறும் போது, யாராவது தேசிய கீதத்தை அவமதித்தால், இந்துஸ்தான் எந்த விலையிலும் அதை பொறுத்துக்கொள்ளாது," என்றார்.
அப்போது குறுக்கிட்ட சட்டப்பேரவை சபாநாயகர், "பூஜ்ஜிய நேரத்தில் இந்த விவகாரம் குறித்து பேசப்படும்," என்று கூறினார். தேஜஸ்வி யாதவ் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பேச நேரம் கோரினார். ஆனால் சபாநாயகர் நேரம் கொடுக்க மறுத்துவிட்டார். இதன் பின்னர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபைக்குள் கூச்சலிடத் தொடங்கினர்.
தொடர்ந்து அவையை நடத்த முற்பட்ட போதிலும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூச்சலிட்டு வந்ததை அடுத்து, சபாநாயகர் சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


