எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன் : வாடிக்கையாளர் மடியில் கொட்டிய டீக்கு ரூ.431 கோடி இழப்பீடு வழங்க ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பார்சல் கட்டும் போது செய்த தவறு காரணமாக ஸ்டார்பக்ஸ் தேநீர் சிந்தியதால் டெலிவரி ஊழியருக்கு 50 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 433.49 கோடி) வழங்க லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 'டிரைவ்-த்ரூ வசதியுடன் கூடிய உணவகங்கள் பரவலாக காணப்படுகின்றன. இத்தகைய உணவகங்களில் வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களில் இருந்தவாறு, ஜன்னல் வழியாக உணவை பெற்றுக் கொண்டு பணம் செலுத்திவிட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 2020-ம் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் டெலிவரி டிரைவராக பணியாற்றி வரும் மைக்கேல் கார்சியா என்பவர், அங்குள்ள ஸ்டார்பக்ஸ் உணவகத்தில் டீ பார்சல்களை வாங்கியுள்ளார். உணவக ஊழியர் சூடான டீ கப் பார்சலை, காரில் இருந்த மைக்கேலிடம் வழங்கியுள்ளார். ஆனால் அந்த டீ கப் சரியாக மூடப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மைக்கேல் அதை பெற்றபோது எதிர்பாராத விதமாக சூடான டீ அவரது மடியில் கொட்டியது. காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த மைக்கேல், வலி தாங்க முடியாமல் அலறினார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் மைக்கேலின் தொடைப் பகுதி மற்றும் ஆணுறுப்பில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மைக்கேலுக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து, தனக்கு நேர்ந்த பாதிப்பிற்காக இழப்பீடு கோரி மைக்கேல் கார்சியா, லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, தீக்காயங்களால் மைக்கேலுக்கு நிரந்தர பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்டார்பக்ஸ் உணவக ஊழியரின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், மனுதாரர் மைக்கேல் கார்சியாவுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடாக ஸ்டார்பக்ஸ் நிறுவனம் 50 மில்லியன் அமெரிக்க டாலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.431 கோடி) இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


