எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, திருச்சியில் 7 தளங்களுடன் 235 கோடி ரூபாய் மதிப்பிலான கலைஞர் நூலக கட்டிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: - காவிரிக் கரையில் அமைந்த திருச்சிராப்பள்ளி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்றும், இது பல்வேறு வசதிகளை உள்ளடக்கி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியப் பகுதியில் ஓர் அறிவுக் களஞ்சியமாக அமைந்திடும் என்றும் தமிழ்நாடு முதல்வர் 27.6.2024 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.
அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், திருச்சிராப்பள்ளி மாநகரில் 1,97,337 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் நூலகக் கட்டடம் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், புத்தகங்கள் மற்றும் இ-புத்தகங்கள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், தொழில்நுட்ப சாதனங்கள் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், என மொத்தம் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரத்துடன் அமைக்கப்படவுள்ள மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு தமிழ்நாடு முதல்வர் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்நூலகத்தின் தரைத் தளத்தில் – வரவேற்பறை, தகவல் வழங்கும் மற்றும் பதிவு செய்யும் பகுதி, பொருட்கள் வைக்கும் பகுதி, முக்கிய பிரமுகர் அறை, சொந்த புத்தகங்கள் படிக்கும் பகுதி, பருவ இதழ்கள் / பத்திரிகைகள் அறை, நூலகர் மற்றும் தகவல் அலுவலர் அறை, காத்திருப்போர் பகுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி மற்றும் 1000 இருக்கைகள் கொண்ட கலையரங்கம்; முதல் தளத்தில் - அறிவியல் மையம், சொந்த புத்தகங்கள் படிக்கும் பகுதி, நிகழ்ச்சிகள் நடத்தும் அரங்கம், குழந்தைகளுக்கான திரையரங்கம், குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் படப்புத்தகங்கள் பகுதி; இரண்டாம் தளத்தில் - கலைஞர் பகுதி, ஆராய்ச்சி மையம், பயிலரங்கம் மற்றும் பல்நோக்குக் கூடம்; மூன்றாம் தளத்தில் – தமிழ் நூலக குறிப்பு பகுதி, தமிழ் நூலகம் - படைப்பாளர் பகுதி, தமிழ் நூல்கள் உறுப்பினர்களுக்கு வழங்கும் பகுதி; நான்காம் தளத்தில் - ரோபாட்டிக்ஸ் மற்றும் விளையாட்டுப் பகுதி, இணைய (டிஜிட்டல்) நூலகம் மற்றும் ஆங்கில நூல்கள் உறுப்பினர்களுக்கு வழங்கும் பகுதி; ஐந்தாம் தளத்தில் - அறிவுசார் மையம், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையம் மற்றும் ஆங்கில நூலக குறிப்பு பகுதி; ஆறாம் தளத்தில் – நூல்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அறை, பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி, அரிய நூல்களுக்கான பகுதி, டிஜிட்டல் மயமாக்கல் பகுதி, டிஜிட்டல் ஸ்டுடியோ, போட்டித் தேர்வு பகுதி மற்றும் கருத்தரங்கு கூடம்; ஏழாம் தளத்தில் - காணொலி (வீடியோ கான்பரன்சிங்) காட்சியரங்கம். தலைமை நூலக அலுவலர் அறை, துணை தலைமை நூலக அலுவலர் அறை, நூலகர் மற்றும் தகவல் அலுவலர் அறை, நிர்வாகப் பகுதி ஆகிய வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.
மேலும், நகரும் படிகட்டுகள், 2 கண்ணாடி மின் தூக்கிகள், 7 மின் தூக்கிகள், தீயணைப்பு வசதிகள், அனைத்து தளங்களிலும் குளிர்சாதன வசதி, மின் ஆக்கிகள், மின்மாற்றிகள், சூரிய மின்களங்கள் போன்ற பல வசதிகளுடன் கட்டப்படவுள்ளது. இந்நூலகத்தில், உலகத் தமிழ் இலக்கியம், பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம், இலக்கணம், கலை, கவிதை, நாடக நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் திராவிட தலைவர்களின் நூல்கள், பெண்ணியம், தேசிய இயக்கத் தலைவர் நூல்கள், அரிய நூல்கள், மருத்துவம், பொறியியல், இசை, விளையாட்டு, சட்டம் போன்ற பல்துறை சார்ந்த நூல்கள், போட்டித் தேர்வு மாணவர்களுக்கான நூல்கள் ஆகியவை இடம்பெறவுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தூத்துக்குடியில் மாணவி கொலை வழக்கு: சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி ஐகோர்ட் கிளையில் மனு
13 Mar 2026தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்றக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அ
-
கள்ளச்சந்தையில் விற்க சிலிண்டர்கள் பதுக்கல்: குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
13 Mar 2026மதுரை, மதுரையில் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை காரணம் காட்டி, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக 398 எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்திருந்த 2 பேர் தமிழ்நாட்டில் முத
-
தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு: கனிமொழி எம்.பி. தகவல்
13 Mar 2026தூத்துக்குடி, தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடுவார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி எம்.பி.. தேர்தல் அறிவிப்பே இன்னும் வரவில்லை.
-
மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் நாளை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
13 Mar 2026சென்னை, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் என்.டி.ஏ.
-
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு புகழேந்தி ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு அறிவிப்பு
13 Mar 2026சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
-
சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1,843 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட 11 சாலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Mar 2026சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.03.2026) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சேலம்,
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு நாளை நேரில் ஆஜராகுகிறார் விஜய்
13 Mar 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விஜய் நாளை நேரில் ஆஜராகுகிறார்.
-
சுட்டு வீழ்த்தப்பட்டதா..? ஈராக்கில் விழுந்து நொறுங்கியது அமெரிக்க விமானம்-4 பேர் பலி
13 Mar 2026தெஹ்ரான், ஈராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானத்தில் பயணித்த பணியாளர்கள் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளி: பார்லி., மக்களவை ஒத்திவைப்பு
13 Mar 2026புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவையில் எல்பிஜி தட்டுப்பாடு குறித்த எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
-
தாய்த்தமிழை காக்க உழைப்பை மட்டும் கொடுங்கள் இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
13 Mar 2026சென்னை, இளைஞர்களே தாய்த்தமிழை காக்க உழைப்பை மட்டும் கொடுங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ரூ.581.65 கோடி மதிப்பிலான அனில் அம்பானியின் சொத்துகள் முடக்கம்
13 Mar 2026புதுடெல்லி, கோவா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.581.65 கோடி மதிப்பிலான
-
தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
13 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.
-
சட்டசபை தொகுதிப் பங்கீடு: இ.பி.எஸ். - டி.டி.வி.தினகரன் ஆலோசனை?
13 Mar 2026சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.
-
ஜல் ஜீவன் திட்ட நிலுவை நிதி ரூ.3,112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடிய
-
அ.தி.மு.க.வில் இணைந்தது ஏன்? காளியம்மாள் விளக்கம்
13 Mar 2026சென்னை, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததற்கான காரணம் குறித்து காளியம்மாள் கருத்து தெரிவித்துள்ளார்.
-
பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை: அசாமில் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்
13 Mar 2026டெல்லி, காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே தருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
-
தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்பட 5 மாநில தோ்தல் தேதி மாா்ச் 16-ல் அறிவிப்பு?
13 Mar 2026புதுடெல்லி, தமிழகம், கேரளம் உள்ளிட்ட நான்கு மாநில சட்டப்பேரவை மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு மாா்ச் 15 அல்லது 16-ஆம் தேதி தோ்தல் தேதியை இந்திய தோ்த
-
பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு: கேன்கள் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் விநியோகிக்க தடை
13 Mar 2026சென்னை, பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் பாட்டில்கள், கேன்களில் பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத
-
இந்திய பங்குச்சந்தைகள் 3-ம் நாளாக கடும் வீழ்ச்சி : ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு
13 Mar 2026மும்பை, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-ம் நாளாக நேற்று (மார்ச் 13) கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகமானது.
-
வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து 3-வது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
13 Mar 2026புதுடெல்லி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக எல்.பி.ஜி.
-
மாதவிடாய் விடுப்பு அளித்தால் பெண்கள் வேலை பறிபோகும்: சுப்ரீம் கோர்ட் கருத்து
13 Mar 2026புதுடெல்லி, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கட்டாய விடுப்பு என்று சட்டம் கொண்டுவந்தால் அது பெண்களின் வாழ்க்கையைப் பாதிக்கும், நிறுவன உரிமையாளர்கள், பெண்களை
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Mar 2026- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி காலை பல்லக்கு, இரவு ராஜாங்க அலங்காரம்
- திருவாரூர் தியாகராஜர் வீதி உலா.
-
இன்றைய ராசிபலன்
13 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
13 Mar 2026


