Idhayam Matrimony

கன்னட அமைப்பினர் போராட்டம்: தமிழக - கர்நாடக எல்லையில் மேலும் பாதுகாப்பு அதிகரிப்பு

சனிக்கிழமை, 22 மார்ச் 2025      தமிழகம்
Karnataka 2025-03-22

Source: provided

ஓசூர் : கன்னட அமைப்பினர் போராட்டம் காரணமாக தமிழக - கர்நாடக எல்லையில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

கர்நாடக மாநிலம் பெலகாவியில் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி மராட்டிய மொழி பேசவில்லை எனக் கூறி கர்நாடக மாநில அரசு பேருந்து நடத்துநரை அங்குள்ள மராட்டிய அமைப்பினர் தாக்கினர்.  இதை கண்டித்தும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் முழு அடைப்பு நடைபெறும் என கன்னட அமைப்பினர் அறிவித்திருந்தனர்.

 இதன் காரணமாக  தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க இரு மாநில போலீஸ் பாதுகாப்புடன் வழக்கம் போல இயக்கப்பட்டு வருவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. எனினும் தமிழக கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நேற்று காலை கன்னட அமைப்பினர் சார்பில் தமிழ்நாட்டிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும், காவிரி ஆறு தங்களது என கூறி முழக்கமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமிழக எல்லையை நோக்கி வர முயன்ற சுமார் 20-க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினரை அம் மாநில போலீஸார் குண்டு கட்டாக கைது செய்தனர்.

முழு அடைப்பு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை எனினும் பாதுகாப்பு காரணங்கள் கருதி போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல தமிழக மாநில எல்லைப் பகுதியான ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின் பேரில் தமிழக போலீஸாரும் கண்காணிப்பு ஈடுபட்டு வருகின்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து