எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புவனேஸ்வர் : மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுவரையறை செய்வது நியாயமற்றது என பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள நவீன் பட்நாயக் அழைக்கப்பட்டிருந்தார். கூட்டத்தில் நேரில் கலந்து கொள்ளாத அவர், காணொளி மூலம் உரையாற்றினார்.
அவர் தனது உரையில், மக்கள் தொகை கட்டுப்பாடு திட்டத்துக்கு மத்திய அரசு பல ஆண்டுகளாக அதிக முன்னுரிமை அளித்தது. மாநிலங்களும் தங்கள் சொந்த முயற்சிகளை எடுத்து தேசிய திட்டத்தை தங்கள் மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தின.
கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகியவை மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில், சிறப்பாக செயல்பட்டுள்ளன. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் இந்த மாநிலங்கள் சாதித்திருக்காவிட்டால், இந்தியாவில் மக்கள் தொகை வெடிப்பு ஏற்பட்டிருக்கும். இது நமது நாட்டின் முன்னேற்றத்தைத் தடம் புரளச் செய்திருக்கும்.
மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுவரையறை செய்வது நியாயமற்றது. ஒடிசா மக்களின் நலன்களைப் பாதுகாக்க பிஜு ஜனதா தளம் எல்லாவற்றையும் செய்யும். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் மத்திய அரசு விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டு சந்தேகங்களைப் போக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


