எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தொகுதி மறுவரையறை அநீதிக்கு எதிராகத் தென் மாநிலங்கள் குரல் கொடுக்காவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது என்று கேடி ராமாராவ் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும். அதை நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அந்த வகையில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.எல்.ஏவான கே.டி ராமாராவ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- மத்திய அரசு பிக் பிரதர் ஆக செயல்பட வேண்டுமே தவிர , பிக் பாஸ் ஆக செயல்படக் கூடாது. சிலர் இப்போது ஏன் பிரச்சினையை பேசுகிறீர்கள் எனக் கேட்கிறார்கள். இதை இப்போது பேசாவிட்டால் வரலாறு எங்களை மன்னிக்காது. நாங்கள் இந்தியர்கள் தான். எங்களுக்கு தெலங்கானா, தெலுங்கு எனத் தனி அடையாளமும் உண்டு.ஜனநாயகம் நீர்த்து போவதை அனுமதிக்க மாட்டோம்
மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை, நமது மாநிலங்களுக்கான நிதி ஆதாரத்தைப் பெரிதும் பாதிக்கும். இந்த அநீதிக்கு எதிராகத் தென் மாநிலங்கள் குரல் கொடுக்காவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மாநிலங்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது. இந்த கூட்டத்தை நடத்தியதற்காக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


