Idhayam Matrimony

அமெரிக்காவில் இருந்து இதுவரை 388 இந்தியர்கள் நாடு கடத்தல் : மத்திய அரசு தகவல்

சனிக்கிழமை, 22 மார்ச் 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : ஜனவரி மாதம் முதல் இதுவரை அமெரிக்காவில் இருந்து 388 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற பின்னர், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை நாடு கடத்தும் பணியை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியர்கள் பலர் அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.

இந்நிலையில், ஜனவரி மாதம் முதல் இதுவரை அமெரிக்காவில் இருந்து 388 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் மத்திய மந்திரி கீர்த்தி வரதன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், கடந்த பிப்ரவரி மாதம் 333 பேர் நேரடியாக 3 ராணுவ விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

வணிக விமானங்கள் மூலம் பனாமா வழியாக 55 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியதாக அவர் கூறியுள்ளார். மேலும் 295 இந்தியர்கள் அமெரிக்க அரசாங்கத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து