எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பங்கேற்கவில்லை.
நாடு முழுவதும் அடுத்த ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில வாரியாக மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆரம்பம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில முதல்வர்கள் மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்) ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா), பினராயி விஜயன் (கேரளா), சித்தராமையா (கர்நாடகா), பகவந்த் மான் (பஞ்சாப்), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா) மற்றும் கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார், முன்னாள் முதல்வர்கள் ஜெகன் மோகன் ரெட்டி (ஆந்திரா), நவீன் பட்நாயக் (ஒடிசா), சந்திரசேகர ராவ் (தெலுங்கானா) ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் நேற்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில், முதல்வர்கள் பினராயி விஜயன், பகவந்த் மான், ரேவந்த் ரெட்டி உள்பட 7 மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் 24 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பங்கேற்கவில்லை. இதேபோல் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கவில்லை. முன்னதாக இரு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


