எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : 18-வது ஐ.பி.எல். சீசன் நேற்று தொடங்கியது. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சி.எஸ்.கே.- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த சீசனில் சி.எஸ்.கே. அணிக்காக ரெய்னா படைத்துள்ள சாதனையை எம்.எஸ். டோனி முறியடிக்க உள்ளார்.
அதிக ரன்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். அவர் 2008 முதல் 2021 வரை 171 இன்னிங்சில் விளையாடி 4,687 ரன் எடுத்துள்ளார். இதில் 1 சதமும், 33 அரை சதமும் அடங்கும். சராசரி 32.32 ஆகும்.
முறியடிக்க வாய்ப்பு...
ரெய்னாவின் சாதனையை இந்த சீசனில் டோனி முறியடிக்க உள்ளார். அதற்கு அவருக்கு இன்னும் 19 ரன்களே தேவை. எம்எஸ் டோனி 202 இன்னிங்சில் 4,669 ரன் எடுத்துள்ளார். அவரது ஸ்கோரில் 22 அரை சதம் அடங்கும். சராசரி 40.25 ஆகும். ஜடேஜா இன்னும் 8 விக்கெட் கைப்பற்றினால் அதிக விக்கெட் கைப்பற்றிய சி.எஸ்.கே. வீரர் என்ற பெருமையை பெறுவார். பிராவோ 140 விக்கெட் (116 போட்டி) வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்சிஸ் வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார். ஜடேஜா 172 போட்டியில் 133 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
பும்ரா சாதனை...
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்த சீசனில் சில போட்டிகளில் ஆட வில்லை. அவர் 6 விக்கெட் கைப்பற்றினால் அதிக விக்கெட் எடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரர் என்ற சாதனையை பெறுவார். மலிங்காவை (170 விக்கெட்) முந்துவார். பும்ரா 165 விக்கெட் எடுத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


