Idhayam Matrimony

காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்; ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2025      உலகம்
Gaza 2025-03-22

Source: provided

காசா சிட்டி : காசா முனையின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நேற்று அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்கு புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போரில் காசா முனையில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  இந்நிலையில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே கடந்த சில வாரங்களாக போர் நிறுத்தம் அமலில் இருந்தது.  இதனிடையே, போர் நிறுத்தத்தின் 2ம் கட்டம் அமல்படுத்தப்படவில்லை.  போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வியடைந்ததையடு காசா முனை மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. அதேவேளை, காசாவில் இருந்து இஸ்ரேல் மீதும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.  இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், காசா முனையின் கான் யூனிஸ், ரபா உள்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நேற்று அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

காசாவின் கான் யூனிசில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் மூத்த தலைவர் சலாஹ் அல் பர்தாவில் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட சலாஹ் அல் பர்தாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு மூத்த தலைவராக செயல்பட்டு வந்தார். கான் யூசில் உள்ள முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சலாஹ்வின் மனைவியும் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து