Idhayam Matrimony

கூலிப்படைகள் மீது தீவிர நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2025      தமிழகம்
Karthik Chithambaram

Source: provided

சென்னை : தமிழகத்தில் கூலிப்படைகள் நடத்தும் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"தமிழகத்தில் கூலிப்படை கொலைகள் அதிகரித்துள்ளன. காரைக்குடியில் குற்றப்பின்னணி கொண்டவர் ஒருவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதே போல் திருநெல்வேலியில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கூலிப்படைகள் நடத்தும் கொலை சம்பவங்களால் தமிழக  மக்கள் அச்சமடைந்துள்ளனர். திடீர் மோதல் காரணமாக நடக்கும் கொலைகளை தடுக்க முடியாது. ஆனால் கூலிப்படை மூலம் திட்டம் தீட்டி கொலை செய்கின்றனர். உளவுத்துறை மூலம் அரசாங்கம் இதனை கண்காணித்து, கூலிப்படைகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து