எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாடிகன் சிட்டி: 38 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து போப் பிரான்சிஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
போப் ஆண்டவர் பிரான்சிஸ், உடல்நல பாதிப்பால் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி, இத்தாலியில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு நடந்த பரிசோதனையில் 2 நுரையீரலிலும் நிமோனியா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின்போது 2 முறை உயிருக்கு ஆபத்தான கட்டத்தை சந்தித்தார். தீவிர சிகிச்சை மூலம் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் அபாய கட்டத்தை தாண்டி இருந்தார்.கடந்த 6-ந்தேதி போப் பிரான்சிஸ் ஒரு ஆடியோ செய்தியை வெளியிட்டார். அதன்பின் 16-ந்தேதி அவரது புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டது.
இந்த நிலையில் போப் பிரான்சிஸ் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். இதுதொடர்பாக டாக்டர்கள் கூறும்போது, போப் பிரான்சிஸ் உடல் நிலை சீராக உள்ளது. இன்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவர் ஒரு மாதத்துக்கு மேலாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2 மாதங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும். அவர் பெரிய கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.
38 நாட்களுக்கு பிறகு போப் பிரான்சிஸ் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பினார். வாடிகனில் உள்ள தனது இல்லத்திற்குத் திரும்புவதற்கு முன்பு ஜெமெல்லி மருத்துவமனையில் இருந்தவாறு போப் ஆசீர்வாதம் வழங்குவார் என வாடிகன் தெரிவித்து உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர் முதல்முறையாக பொது வெளியில் மக்களை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


