Idhayam Matrimony

அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது: கர்நாடகா துணை முதல்வர் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2025      தமிழகம்
Annamalai 2024-01-16

Source: provided

சென்னை: அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது என்று கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

எந்த திட்டமும் இல்லாமல் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் நடந்ததாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக சென்னை விமானநிலையத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், "சொந்த மாநிலம் மீது அண்ணாமலைக்கு அக்கறை இல்லை. பா.ஜ.க.வுக்கே விசுவாசம் காட்டுகிறார். நேற்றைய கூட்டம் குறித்து அண்ணாமலை பேசுவது முக்கியமல்ல பிரதமர், உள்துறை மந்திரியின் கருத்தே முக்கியம். அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது, அவர் கட்சிக்கு வேலை மட்டுமே செய்கிறார். அவர் வேலையை அவர் செய்யட்டும்" என்று கூறினார்.

இதனையடுத்து மாநில சட்டசபை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால் அது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இதுகுறித்து ரேவந்த் ரெட்டி பேசி இருக்கின்றார். முதலில் நமது ஒருங்கிணைந்த குரலை வலுவானதாக்குவோம். அதன் பிறகு நாடாளுமன்றம் குறித்து பேசலாம்" என்று டி.கே.சிவக்குமார் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து