Idhayam Matrimony

அமைச்சரை "முறை" வைத்து அழைத்த எம்.எல்.ஏ.வால் அவையில் சிரிப்பலை!

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2025      தமிழகம்
Senthil-Balaji 2023 03 27

Source: provided

சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜியை மாப்பிள்ளை என  அ.தி.மு.க.  எம்.எல்.ஏ. குறிப்பிட்டதால்  அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரத்தின் போது மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார்.

அப்போது அ.தி.மு.க.  எம்.எல்.ஏ. (பவானி தொகுதி) கே.சி.கருப்பண்ணன் பேசுகையில், தனியார் நிறுவனங்கள் சோலார் மின்தகடுகளை அதிகமாக தயாரிக்கின்றன. அவை 100 கேவி திறன் கொண்டதாக உள்ளன. அவற்றை 120 கே.வி திறன் உள்ளதாக அனுமதிக்க வேண்டும்.

இதனால் மின்வாரியத்திற்கு எந்த நட்டமும் ஏற்படாது. இதற்கு மாப்பிள்ளை ( அமைச்சர் செந்தில் பாலாஜி) அனுமதிக்க வேண்டும் என்றார். அ.தி.மு.க.  எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. பின்னர் பழக்க தோஷத்தில் வந்துவிட்டது சாரி… சாரி... என்று கூறி கருப்பண்ணன் சமாளித்தார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து