எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருப்பத்தூர் : அரசு பஸ் பின்னால் பிளஸ்-2 மாணவி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் டிரைவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை ஆலங்காயம் நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் கொத்தகோட்டை கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தை நெருங்கியபோது, பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுத காத்திருந்த மாணவி பஸ்சை கைகாட்டி நிறுத்தினார்.
ஆனால், பஸ்சை நிறுத்தாமல் டிரைவர் சென்றார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, பஸ்சை விட்டுவிட்டால் தேர்வு எழுதச் செல்ல முடியாதே என்ற அச்சத்தில் பஸ்சை பிடித்துக்கொண்டே பின்னால் ஓடிச் சென்றார். சற்று தொலைவிலேயே சென்று பஸ்சை டிரைவர் நிறுத்தினார். அதன்பிறகு மாணவி பஸ்சில் ஏறிச் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், தேர்வு எழுதுவதற்காகப் பள்ளி செல்ல காத்திருந்த மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பஸ் ஓட்டுநர் முனிராஜ் மீது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (விழுப்புரம்) மேலாண்மை இயக்குநர் விசாரணை மேற்கொண்டார். மேலும் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


