Idhayam Matrimony

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2025      இந்தியா
Rahul-2025-03-25

புதுடில்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் கூறுகையில், கேரளத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள்கள் பணி செய்பவர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. இந்த திட்டத்தின் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிக்கான ஊதியம் 15 நாள்களுக்கு மேல் தாமதமாகிவிட்டால், அவர்களுக்கு வட்டியுடன் கூடிய ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

ஆனால் மத்திய அரசு இந்தத் திட்டத்தை முடிக்க நினைக்கிறது. இதனால், அன்றாடம் கூலி வேலை செய்துவருபவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் ஊதியம் 15 நாள்களுக்கு மேல் தாமதமாகிவிட்டால், தாமதமான ஊதியத்திற்கு வட்டி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அமைச்சசரிடமிருந்து எந்த உறுதியான பதிலும் இல்லை. எனவே, இந்த பிரச்னையை கண்டித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே பிரியங்கா, ராகுல் உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து