Idhayam Matrimony

இஸ்ரேலில் ஆஸ்கர் வென்ற பாலஸ்தீன இயக்குநர் கைது

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2025      உலகம்
Jail

 டெல் அவிவ், ஆஸ்கர் விருது வென்ற பாலஸ்தீன இயக்குநர் ஒருவர் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

சிறந்த ஆவணத் திரைப்படம் பிரிவில் ஆஸ்கா் விருதை வென்ற ‘நோ அதா் லேண்ட்’ படத்தை யுவால் ஆபிரஹாம், பசெல் ஆட்ரா, ஹம்தன் பலால், ராச்செல் ஸோர் ஆகிய 4 பேர் இணைந்து இயக்கினர். இதில், யுவால் இஸ்ரேலைச் சேர்ந்த பத்திரிகையாளர். இப்படத்தின் 4 இயக்குநர்களில் ஒருவரான ஹம்தன் பலால் இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டு இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருடன் சேர்த்து, 3 பாலஸ்தீனர்கள் சூசியா என்ற கிராமத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ராணுவ முகாமில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் இயக்குநரின் வழக்குரைஞர் தெரிவித்தார்.

பலால் கைது செய்யப்பட்டபோது அங்கிருந்த மற்றொரு இயக்குநரான பசேல் அட்ரா கூறுகையில், “20-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கிராமத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் முகமூடி அணிந்தும், துப்பாக்கிகளை ஏந்தியும், இஸ்ரேல் ராணுவ உடையிலும் இருந்தனர் என்றார்.

இஸ்ரேல் ராணுவம் இந்தக் கைது சம்பவம் குறித்துப் பேசியபோது, “ராணுவ வீரர்களின் மீது கற்களை வீசிய பாலஸ்தீனர்களை நாங்கள் கைது செய்தோம். மேலும், பாலஸ்தீன் - இஸ்ரேல் மக்களுக்கு இடையிலான மோதலில் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு இஸ்ரேலியரையும் கைது செய்தோம். இஸ்ரேல் போலீஸ் அவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளனர்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து