முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சையில் ரம்ஜான் விடுமுறை ரத்து? தமிழக அரசு விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2025      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : தஞ்சை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை விடுமுறையை வேலை நாளாக அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. பலரும் இதை வேகமாக பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிப்பார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் பொய்யான தகவல். மாசிமக திருவிழாவை முன்னிட்டு கடந்த 12-ந்தேதியன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

29-ந்தேதியன்று ரம்ஜான் பண்டிகை இல்லை. வருகிற 31-ந்தேதியன்று (திங்கட்கிழமை) தான் ரம்ஜான் விடுமுறை என தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பிறை பார்க்கப்பட்டு தமிழக அரசு தலைமை காஜி அறிவிப்பின் அடிப்படையில் ரம்ஜான் தேதியில் மாற்றங்கள் இருக்கலாம்." என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து