Idhayam Matrimony

ஸ்ரேயாஸ் அதிரடி அரைசதம்

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2025      விளையாட்டு
Shreyas-Iyer 2024-05-27

Source: provided

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற குஜராத் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து பஞ்சாபின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா மற்றும் ப்ரப்சிம்ரன் சிங் களம் இறங்கினர். இதில் ப்ரப்சிம்ரன் சிங் 5 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களம் இறங்கினார்.

மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரியான்ஷ் ஆர்யா 47 ரன்னிலும், அடுத்து வந்த உமர்சாய் 16 ரன்னிலும், மேக்ஸ்வெல் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து ஸ்ரேயாஸுடன், ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தார். இதில் அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் அரைசதம் அடித்து அசத்தினார். மறுபுறம் ஸ்டாய்னிஸ் 20 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஷசாங் சிங் களம் இறங்கினார். இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்கள் எடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து