Idhayam Matrimony

திருப்பூரில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு

புதன்கிழமை, 26 மார்ச் 2025      தமிழகம்
KN-Nehru 2023 04 01

சென்னை, திருப்பூரில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்  என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

தமிழக சட்டசபையின் நேற்றைய கேள்வி நேரத்தின்போது, திருப்பூரில் 1 லட்சம் டன் திடக்கழிவுகள் கொட்டி கிடப்பதாக தகவல் வருகிறது. எனவே அவற்றை அகற்ற அரசு வழிமுறைகளை செய்யுமா என்று சட்டமன்ற உறுப்பினர் கொங்கு ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் கோவையில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான குப்பைகளை கோவையில் இருந்து மட்டுமல்லாமல் அருகில் இருந்தும் கொண்டு செல்ல வேண்டும். கோவையில் தொடங்கும்போது திருப்பூரில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.

தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகராட்சியில் கழிவுகளை கொட்ட நிரந்தரமாக இடம் தேர்வு செய்து தர அரசு முன்வருமா என்று கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, ஏற்கனவே அங்கு 4 ஏக்கரில் குப்பை கொட்டும் இடத்தில் பயோ மைனிங் முறையில் குப்பை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் குப்பைகளை ஊருக்கு வெளியே கொட்டும் வகையில் இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து