எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தூக்குத்துடி : காதல் விவகாரத்தில் 17 வயது சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூக்குத்துடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது 17 வயது மகளும், பரமக்குடி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த அய்யனாரும், அவரது மனைவியும் தங்களது மகளை கண்டித்துள்ளனர். இதையடுத்து சிறுமி, அவருடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.
மேலும் சிறுமியை அவரது பாட்டி வீட்டுக்கு, பெற்றோர் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கடந்த 23-ம்தேதி அங்கு வந்த 2 இளைஞர்கள் சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். உயிருக்கு போராடிய சிறுமி மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் சிறுமி அளித்த வாக்குமூலத்தில், அவரை கொலை செய்ய முயன்றது பரமக்குடியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த எட்டயபுரம் போலீசார் சந்தோஷ், முத்தையா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


