Idhayam Matrimony

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும்; அமித்ஷா நம்பிக்கை

புதன்கிழமை, 26 மார்ச் 2025      இந்தியா
Amit-Shah 2023-11-26

Source: provided

டெல்லி : தமீழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமையும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்குமேல் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., பா.ம.க., பா.ஜ.க., நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுக்கத்தொடங்கி விட்டன. கூட்டணி குறித்தும் அரசியல் கட்சிகள் தற்போதே முடிவுகளை எடுக்கத்தொடங்கி விட்டன. இதனிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சி.வி. சண்முகம், தம்பிதுரை, கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் டெல்லி சென்றனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், பா.ஜ.க. மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷாவை சந்தித்தனர். தமிழக சட்டசபை தேர்தல், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைப்பது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 1 மணிநேரத்திற்குமேல் ஆலோசனை நடைபெற்றது. இந்த சந்திப்பை தொடர்ந்து 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் என்று பா.ஜ.க. மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்' என தெரிவித்துள்ளார். இதன் மூலம் 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி அமையும் என்பது பெருமளவு உறுதியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து