முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதன்கிழமை, 26 மார்ச் 2025      இந்தியா
Supreme-Court 2024-11-269

Source: provided

புதுடெல்லி : தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டின் ஓர் அறையில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு சில மூட்டைகளில் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பணம் தனக்குச் சொந்தமானது அல்ல என்று நீதிபதி யஷ்வந்த் வர்மா, தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் விளக்கம் அளித்துள்ளார். எனினும் விசாரணை தொடர்கிறது.

நீதிபதி யஷ்வந்த் வர்மா நீதித்துறைப் பணிகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு அவரை மாற்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மா வேண்டாம் என்றும் அவர் மீதான விசாரணை முடிவடையும்வரை அவர் தில்லியில் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் அலகாபாத் வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடத்தியது.

முதலில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி யஷ்வந்த் வர்மா, 2021ல் தில்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியைக் கலந்தாலோசிக்காமல் உயர் நீதிமன்ற நீதிபதி மீது எந்த குற்றவியல் வழக்கும் பதிவு செய்ய முடியாது என்ற 1991 தீர்ப்பை எதிர்த்து, நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யவும் இந்த வழக்கை தில்லி காவல்துறை விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர்கள் வாய்வழியாக முறையிட்டனர்.

இதனை ஏற்றுக்கொள்ளாத சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, அவசரமாக இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்றும் மனுவாகத் தாக்கல் செய்தால் உரிய நேரத்தில் கண்டிப்பாக விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து