எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மகளிர் உரிமை தொகை திட்டத்தில் ரூ.1,000 யாருக்கெல்லாம் கிடைக்காது என்பது குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கொள்கை விளக்க குறிப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரத்தை வழங்குவதற்காக, முதல்வர் மு.க. ஸ்டாலின் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டம் சுமார் 115 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதத்திற்கு ரூ.1000/-வழங்குகிறது.
மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற தகுதி இல்லாதவர்கள் யார்?
* ரூ.25 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
* குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.
* ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர்.
* மாநில, மத்திய அரசு ஊழியர்கள் /பொதுத்துறை நிறுவனங்கள் / வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள். உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள். மற்றும் அவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள். மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்.
* ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் உறுப்பினர்கள். தலைவர்கள் மற்றும் சொந்த பயன்பாட்டுக்கு சீருந்து, ஈப்பு, டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்.
* ஆண்டுக்கு ரூ.50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.
விதிவிலக்குகள் என்னென்ன?
* மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் அறிவுசார் மாற்றுத்திறன் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன். முதுகுத்தண்டுவடம் / தண்டுவடம் மறப்பு நோய் மற்றும் பார்க்கின்சன் நோய் மாற்றுத் திறன், தசை சிதைவு நோய் மாற்றுத்திறன். தொழுநோய் மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை.
* இவ்வகைப்பாட்டினர் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்விதத் தகுதியின்மை வரவில்லை எனில் தகுதியானவர்கள். வகைப்பாட்டிலும் விண்ணப்பிக்கலாம்.
* இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
* வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர. அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


