Idhayam Matrimony

கோவையில் மூதாட்டி கூட்டு பலாத்காரம்: 3 வடமாநில தொழிலாளர்கள் கைது

வியாழக்கிழமை, 27 மார்ச் 2025      தமிழகம்
Jail 2024-10-04

கோவை, கோவையில் மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3  வடமாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. தனியாக வசித்து வரும் இவர், கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துகிறார். இந்த மூதாட்டியின் வீடு அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றுமுன்தினம் அதிகாலையில் மூதாட்டி வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த 3 வடமாநில தொழிலாளர்கள் திடீரென அவரை தாக்கி கீழே தள்ளினர். பின்னர் மூதாட்டி என்றும் பாராமல் அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கதறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

உடனே அந்த வடமாநில தொழிலாளர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை சுற்றி வளைத்து அக்கம்பக்கத்தினர் பிடித்தனர். ஆனாலும் ஒருவர் தப்பி ஓடினார். மீதமுள்ள 2 பேரை பிடித்து கோவில்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அத்துடன் தப்பி ஓடிய நபரையும் போலீசார் தேடிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து