Idhayam Matrimony

எக்ஸ் பதிவுக்கு சுந்தர் பிச்சை பதில்

வியாழக்கிழமை, 27 மார்ச் 2025      விளையாட்டு
Sundar-Pichai 2023 04 19

Source: provided

நடப்பு ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சுக்கு எதிராக தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்திற்கான குஜராத் அணியின் பிளேயிங் லெவனில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் இடம்பெறாதது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வரும் அவர் ஐ.பி.எல். -ல் பிளேயிங் லெவனில் இடம்பெறாதது பலரது மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது குறித்து ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்திய அணியின் சிறந்த 15 வீரர்களில் ஒருவராக இடம் பெறும் சுந்தருக்கு 10 அணிகள் இருக்கும் ஐபி.எல். தொடரில் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை என்பது மர்மமாகும்" என்று பதிவிட்டிருந்தார். ரசிகரின் இந்த பதிவிற்கு கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, "எனக்கும் கூட இந்த ஆச்சரியமாக இருக்கிறது" என்று பதிலளித்தார்.

சென்னையில் டேபிள் டென்னிஸ் 

உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கன்டென்டர் போட்டித் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (வியாழக்கிழமை) தொடங்கியது. மொத்தம் ரூ.2.35 கோடி பரிசுத் தொகைக்கான இந்த சர்வதேச போட்டி 30-ந் தேதி வரை நடக்கிறது. ஆண்கள், பெண்கள் ஒற்றையர், ஆண்கள், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய 5 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது. 20 நாடுகளை சேர்ந்த 192 முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் சரத் கமல், சத்யன், மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா உள்ளிட்ட 30 இந்திய வீரர், வீராங்கனைகளும் அடங்குவார்கள்.

காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவரான சென்னையை சேர்ந்த 42 வயதான சரத் கமல் இந்த தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அர்ஜென்டினா அணி இந்தியா வருகை 

2022-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி, வருகிற அக்டோபர் மாதம் இந்தியா வருகிறது. இந்தியாவில் கால்பந்தை பிரபலப்படுத்தும் முயற்சியின் ஒரு அங்கமாக வரும் அர்ஜென்டினா அணி, கேரளாவில் நடைபெறும் கண்காட்சி போட்டியில் விளையாடுகிறது. மெஸ்சி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இதில் ஆடுகிறார்கள். 2011-ம் ஆண்டுக்கு பிறகு அர்ஜென்டினா அணி இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.  

மியாமி ஓபன் அரையிறுதியில் பெகுலா

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிப் போட்டியில் எம்மா ரடுகானுவை பெகுலா வென்றார். இந்தப் போட்டியில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா இங்கிலாந்தின் எம்மா ரடுகானுவை 6-4, 6-7(3), 6-2 செட்களில் வீழ்த்தினார்.

இந்தப் போட்டி 2 மணி நேரம் 25 நிமிஷங்கள் ஆனது. இந்தப் போட்டியில் வென்ற பெகுலா 4 ஆண்டுகளில் 3ஆவது முறையாக மியாமி ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் பிலிப்பின்ஸ்ஸின் இளம் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலாவை இன்று (மார்ச்.28) சந்திக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து