Idhayam Matrimony

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

சனிக்கிழமை, 29 மார்ச் 2025      தமிழகம்
Senthi-Balaji 2024-12-09

Source: provided

புதுடெல்லி : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.

பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அடுத்த சில நாட்களில் மின்துறை அமைச்சர் பொறுப்பு மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டது.

இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதான லஞ்ச வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் விசாரணை குறித்த நிலையை அறிக்கையை சீலிட்ட உறையில் அளிக்க சிறப்பு கோர்ட்க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து அந்த வழக்குகளின் விசாரணை குறித்த நிலை அறிக்கையை சீலிட்ட உறையில், சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு கோர்ட் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், நிலை அறிக்கையின் நகல்களை மனுதாரர், தமிழ்நாடு அரசு ஆகிய தரப்புக்கு வழங்க உத்தரவிட்டனர்.

நேற்று முன்தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் சிறப்பு கோர்ட் ஒரு வாரத்துக்குள் சம்மன் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் எடுக்கப்பட்ட விசாரணை நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையை மே 2-ந்தேதிக்குள் சிறப்பு கோர்ட் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணை மே 9-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து