Idhayam Matrimony

மியான்மர் நிலநடுக்கம்: நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா

சனிக்கிழமை, 29 மார்ச் 2025      இந்தியா
India 2023-09-17

Source: provided

டெல்லி, : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளது.

மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் மியான்மரில் 144 பேர், தாய்லாந்தில் 10 பேர் என மொத்தம் 154 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்துள்ள நிலையில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர். இதனால், உயிரிழப்பு மேலும் அதிகாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, மீட்புப்பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. தற்காலிக கூடாரம், போர்வை, உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சூரிய ஒளி மின் விளக்கு, ஜெனரேட்டர், அடிப்படை மருந்துகள் உள்பட பல்வேறு நிவாரண பொருட்கள் ராணுவ விமானம் மூலம் மியான்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து