எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாஸ்கோ, கிரீன்லாந்தை கைப்பற்றும் டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டத்தில் ரஷ்யா தலையிடாது என விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ஆர்க்டிக் பிராந்தியத்துக்கு வடக்கே உள்ள ரஷ்யாவின் மிகப்பெரிய நகரமான முர்மான்ஸ்க்குக்கு பயணம் மேற்கொண்ட விளாடிமிர் புதின், அங்கு நடந்த ரஷ்யாவின் ஆர்க்டிக் மன்றத்தில் பேசும்போது, “ஆர்க்டிக் பிராந்தியத்தில் புவிசார் அரசியல் போட்டி தீவிரமடைந்து வருகிறது. கிரீன்லாந்தை கைப்பற்றும் டொனால்ட் ட்ரம்பின் திட்டம் அதற்கு ஒரு முக்கிய உதாரணம்.
கிரீன்லாந்து தொடர்பான அமெரிக்காவின் திட்டங்கள் தீவிரமானவை. இந்தத் திட்டங்கள் ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்டுள்ளன. மேலும் அமெரிக்கா ஆர்க்டிக் பிராந்தியத்தில் அதன் புவிசார் மூலோபாய, ராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை முறையாகத் தொடரும் என்பது தெளிவாகிறது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றம் இது. கிரீன்லாந்தைப் பொறுத்தவரை இது இரண்டு குறிப்பிட்ட நாடுகளுக்கு (அமெரிக்கா மற்றும் டென்மார்க்) இடையேயாது. இதற்கும் ரஷ்யாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” என்று கூறினார்.
புதினின் இந்த உரை, சர்வதேச அளவில் முக்கிய பேசுபொருளாக மாறி இருக்கிறது. புவிசார் அரசியல் மற்றும் ராணுவ வல்லுநர்கள் இதை, ரஷ்யாவும் அமெரிக்காவும் நெருக்கமான உறவுகளை வளர்ப்பதற்கான முயற்சி என்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


