Idhayam Matrimony

வி.கே.பாண்டியனின் மனைவி விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பம்

சனிக்கிழமை, 29 மார்ச் 2025      இந்தியா
naveen-patnaik

Source: provided

புவனேஸ்வர் : அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு கோரி வி. கே. பாண்டியனின் மனைவியும், ஒடிசாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

2000-ஆம் ஆண்டு ஒடிசா பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர் நிதித்துறையில் சிறப்புச் செயலாளராக உள்ளார். இந்த நிலையில் சுஜாதா தனிப்பட்ட காரணங்களுக்காக விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள்  தெரிவித்தன.

அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய சுஜாதாவின் கணவர் வி.கே. பாண்டியனும் அக்டோபர் 2023 இல் விருப்ப ஓய்வு பெற்று நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். ஆனால் கடந்த ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் அக்கட்சி தோல்வியை தழுவியது.

இத்தோல்விக்கு வி.கே.பாண்டியன் தான் காரணம் என்று பல்வேறு தரப்பினரால் கடுமையாக விமா்சிக்கப்பட்டாா். ஆனால், ‘பாண்டியனை விமா்சிப்பது துரதிருஷ்டவசமானது மற்றும் அவரது பணி பாராட்டுக்குரியது’ என்று நவீன் பட்நாயக் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து தீவிர அரசியலில் இருந்து விலகி கொள்வதாக வி.கே.பாண்டியன் அறிவித்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியனும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து