எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை நந்தனம் எம்.சி. ராஜா விடுதி வளாகத்தில் ரூ.44.50 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய விடுதி கட்டிடம், அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி திறக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத் துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களின் உயர் கல்வி கனவை நனவாக்க, சென்னை நந்தனம் எம்.சி. ராஜா விடுதி வளாகத்தில் 500 மாணவர்கள் தங்கி பயில, 10 தளங்களுடன், 121 அறைகள், நவீன வசதியுடன் நூலகம், பயிலகம், கற்றல் கற்பித்தல் அறை, உடற்பயிற்சி கூடம், உள்அரங்கு விளையாட்டு கூடம் ஆகியவற்றுடன் கூடிய புதிய கட்டிடம் ரூ.44.50 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கத்தை போற்றும் வகையில், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி சமத்துவ நாளன்று இந்த விடுதி திறக்கப்பட உள்ளது. இன்றைய கூட்டத்துக்கு வந்துள்ள எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தோழமை கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் அனைவரும் திறப்பு விழாவில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
முன்னதாக எம்.சி. ராஜா ஆண்கள் விடுதி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் புதிய விடுதி கட்டிட கட்டுமான பணிகளை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். குறித்த காலத்துக்குள் பணிகளை முடிக்குமாறு பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


