Idhayam Matrimony

தேர்வு பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத தனியார் பள்ளி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை : தேர்வுத் துறை இயக்குநரகம் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2025      தமிழகம்
TN 2023-05-09

Source: provided

சென்னை : தனியார் பள்ளி ஆசிரியர்களை பொதுத் தேர்வு பணிக்கு அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத் துறை எச்சரித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடந்தது. இதையடுத்து 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு  3 நாட்களுக்கு முன் தொடங்கியது.  

இதற்கிடையே வழக்கமாக பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர்களாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள். ஆனால், 10-ம் வகுப்பு தேர்வு நடைபெறும் மையங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் தனியார் பள்ளி ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதேநேரம் சென்னை உட்பட சில மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அனுப்புவதில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநரகம் சார்பில்  அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘‘பொதுத்தேர்வு பணிக்கு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கட்டாயம் வேலைக்கு வர வேண்டும். தேர்வு பணிக்கு வராமல் இருந்தால் அந்த பள்ளி நிர்வாகங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே, பொதுத் தேர்வு பணிக்கு தங்கள் ஆசிரியர்களை தனியார் பள்ளி முதல்வர்கள் அனுப்பிவைக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து