எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழகம் முழுவதும் பள்ளிகளின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரிய பொதுநல வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்த 4 வயது சிறுமி, செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரி பா.ஜ.க. வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது ஷபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘சிறப்பு புலனாய்வு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என மனுதாரர் கடந்த ஜனவரி 6-ம் தேதி அரசுக்கு மனு அளித்துவிட்டு, போதிய அவகாசம் தராமல் உடனடியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதன்மூலம், பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை தவறாக பயன்படுத்தியுள்ளார். செப்டிக் டேங்கில் விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. அதற்காக ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் எப்படி குறைகூற முடியும்’’ என்று கேள்வி எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து, வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ‘வழக்கை மனுதாரர் வாபஸ் பெற்றாலும்கூட, அவரது மனு மீது ஒரு வாரத்தில் பதில் அளிக்கப்படும்’ என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


