எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நேப்பிடா : மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று மியான்மர் சமூக ஆர்வலர்கள் அளித்த தகவல்களின் பேரில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
.இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் (பர்மா) மோனிவா நகருக்கு அருகே 3 நாட்களுக்கு முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.7 ஆக பதிவானது. இதில் மியான்மர் தலைநகர் நேப்பிடா, சாகைங், மண்டலை, பைகோ, மாகுவே, ஷான் ஆகிய 6 மாகாணங்கள் நிலநடுக்கத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் மியான்மருக்கு உதவுவதற்காக 'ஆபரேசன் பிரம்மா' என்ற நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதன்படி 15 டன் நிவாரண பொருட்களுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 80 வீரர்கள் சிறப்பு விமானத்தில் மியான்மருக்கு சென்றுள்ளனர். இந்திய ராணுவத்தின் சார்பில் மியான்மரில் தற்காலிக மருத்துவமனை தொடங்கப்பட்டு உள்ளது. இந்திய கடற்படையை சேர்ந்த ஐஎன்எஸ் சாவித்ரி கப்பலில் 40 டன் நிவாரண பொருட்கள் மியான்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இந்தியாவை சேர்ந்த சுமார் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் தாய்லாந்து, மியான்மருக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.
மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்திலும் 3 நாட்களுக்கு முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் தலைநகர் பாங்காக்கில் புதிதாக கட்டப்பட்ட 30 மாடி கட்டிடம் இடிந்து நொறுங்கியது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 68 பேர் படுகாயம் அடைந்தனர். 101 பேர் கட்டிடத்தில் சிக்கி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, மியான்மர் சமூக ஆர்வலர்கள் அளித்த தகவல்களின்பேரில் சர்வதேச ஊடகங்கள், நிலநடுக்க பாதிப்பு குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளன. அதில் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்திருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


